பல்லவி
1த்ரி-லோக மாதா நன்னு ப்3ரோவு கருணனு
தி3ன-தி3ன(மி)கனு ப்3ரோவுமு அம்பா3
அனுபல்லவி
விலோகிம்புமு 2ஸத3ய நன்னு சல்லனி
வீக்ஷிஞ்சி 3க்ஷணமுன காமாக்ஷி (த்ரி-லோக)
சரணம்
சரணம் 1
4நின்னு நம்மி(யு)ண்ட3க3 ஸ்1ரம-பட3 வலெனா
5நே(னெ)ந்து3 கா3ன தி3க்கு நின்னு வினா
க4னமுகா3 கோரிகல கோரி கோரி(யே)மி
கா3னக 6கி2ன்னுட3(னை)தி த4ன்யு ஜேஸி (த்ரி-லோக)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
த்ரி/-லோக/ மாதா/ நன்னு/ ப்3ரோவு/ கருணனு/
மூன்று/ உலக/ தாயே/ என்னை/ காப்பாய்/ கருணையுடன்/
தி3ன-தி3னமு/-இகனு/ ப்3ரோவுமு/ அம்பா3/
தினந்தினமும்/ இனி/ காப்பாய்/ அம்மா/
அனுபல்லவி
விலோகிம்புமு/ ஸத3ய/ நன்னு/ சல்லனி/
நோக்குவாயம்மா/ தயையுடன்/ என்னை/ குளுமையாக/
வீக்ஷிஞ்சி/ க்ஷணமுன/ காமாக்ஷி/ (த்ரி-லோக)
கண்டு/ நொடியாகிலும்/ காமாட்சீ/ (மூவுலக)
சரணம்
சரணம் 1
நின்னு/ நம்மி/-உண்ட3க3/ ஸ்1ரம/-பட3/ வலெனா/
உன்னை/ நம்பி/ யிருக்க/ சிரம/ பட/ வேண்டுமா/
நேனு/-எந்து3/ கா3ன/ தி3க்கு/ நின்னு/ வினா/
நான்/ எங்கும்/ காணேன்/ புகல்/ உன்னை/ யன்றி/
க4னமுகா3/ கோரிகல/ கோரி/ கோரி/-ஏமி/
பேரூக்கத்துடன்/ கோரிக்கைகளை/ கோரி/ கோரி/ ஏதும்/
கா3னக/ கி2ன்னுட3னு/-ஐதி/ த4ன்யு/ ஜேஸி/ (த்ரி-லோக)
காணாது/ நொந்தவன்/ ஆகினேன்/ பேறுடைத்தோன்/ ஆக்கி/ (மூவுலக)
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - ஸத3ய நன்னு சல்லனி - ஸத3ய நனு சல்லனி.
3 - க்ஷணமுன - நொடியில் - எல்லா புத்தகங்களிலும் 'க்ஷணமுன' என்றே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், 'நொடியாகிலும்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அந்தப் பொருளே இவ்விடத்தில் பொருந்தும். எனவே 'க்ஷணமைன' என்றிருக்க வேண்டும் என்று நான் கருதுகின்றேன்.
4 - நின்னு நம்மியுண்ட3க3 - நினு நம்மியுண்ட3க3.
5 - நேனெந்து3 கா3ன - நேனெந்தி3 கா3ன : 'நேனெந்தி3 கா3ன' என்பது தவறாகும்.
6 - கி2ன்னுட3னைதி - கி2ன்னட3னைதி - கி2ன்னுடை3தி : 'கி2ன்னட3னைதி' என்பது தவறாகும்.
Top
7 - சபல சித்துட3னு ஸததமு க்ரு2பகு பாத்ருட3னு வேடெ3த3னு நினு கீர்திஞ்சி எட்லைன நீ பி3ட்3ட3யனி - சாபல்ய சித்துட3னி ஸந்ததமு க்ரு2பகு பாத்ருட3னுசு வேத்3யுட3னி நனு வீக்ஷிஞ்சகிட்லாயெ நீ பி3ட்3ட3யனி : பிற்கூறியது மிக்குப் பிழையாகும்.
8 - ஸ1ரணனே - ஸ1ரணமே : 'ஸ1ரணமே' என்பது இவ்விடத்தில் பொருந்தாது.
9 - கல்ப வல்லீ - கல்ப வல்லி.
10 - ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸோத3ரீ - ஸ்1யாம க்ரு2ஷ்ண ஸோத3ரி.
Top
மேற்கோள்கள்
1 - த்ரி-லோக - மூவுலகம் - வானுலகம், புவி, கீழுலகம்.
Top
விளக்கம்
9 - கல்ப வல்லீ - கற்பகக் கொடி - விரும்பியதருளும் கற்ப தருவின் கொடி.
Top